Friday, June 20, 2008

உன் நினைவுகள்!

காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்பே..
விடியலாய் என்னுள்
விரவிக் கிடக்கிறாய் நீ..

என் காதலை
எழுதிச் சொல்ல
எதுவும் இல்லை என்று..
இதயத்தைத் தருகிறேன்..
எடுத்துக் கொள்!

மின்னல் வீசும் உன்
கண்களின் ஓரம் சிறு துளி...
என் இதயத்தில் இடி!!

என் நினைவை இனிப்பாக்கி
நெஞ்சை தவிப்பாக்கினாய்!

துணியில் பட்ட எண்ணைத் துளியாய்
என் மனதை மெல்ல ஆக்கிரமிக்கிறது...
உன் நினைவுகள்!!

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில்
உணர்ந்தேன் உன் அருகாமையை...
எத்தனை மென்மையானவள் நீ!!

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள்
எப்பொதுமே தொடர்போடு இருக்கும்...
இது chaos theory!
காதலும் நாமும் போல!!

யாருக்கும் தெரியாது...
எந்த தென்றலின் தொடலில்
மூங்கில் புல்லாங்குழல் ஆகுமென்று!
நான் ஒவ்வொரு முறையும் ஆகிறேன்..
நீ தொடும் பொழுது!

என் நிழலும் நீயானாய்!
என் வனத்தில் பூவானாய்!!
என் உயிரில் மெய்யானாய்!!!
நான் உயிர்மெய்யானேன்!

என் நிழலாய் நீ வருவாயென்றால்...
வெய்யிலில் நடக்கவும் சம்மதமே!

காற்று வீசும் திசையெங்கும்
paper பறப்பது போல்..
உன் கண்கள் பார்க்கும் தொலைவெங்கும்
என் மனது பறக்கிறது!

பார்வதிக்குக்கூட
பாதி உடல் தான் கொடுத்தான் சிவன்..
நானோ உன்னிடம்
முழுவதும் தருகிறேன் என்னை!