நதியாய் வந்தேன்...
கடலாய் இருந்தாய்!
பனியாய் வந்தேன்...
துளியாய் இருந்தாய்!
இதழாய் வந்தேன்...
மலராய் இருந்தாய்!
அன்பாய் வந்தேன்...
யோசித்தாய்....
அள்ளிக்கொண்டாய் - என்னை உன்
அன்பில் கொன்றாய்!
என்னைப் பிரிந்துசென்று
தனிமைப்பட வைத்தாய்.. - என்
தனிமையை!
அதிகாலை நேர
வெந்நீர் குளியல் போல
இருக்கிறது...
உன் அருகாமை!
நீ இமைக்கும்
ஒவ்வொரு முறையும்...
இரவு பகல் எனக்கு!
இரவு நேர வானவில் போலத்தான்...
நீ
உறங்கும் போது புன்னகைப்பதும்!
ஒவ்வொரு முறை நீ
இயற்கையை ரசிக்கையில் - நான்
உன்னை ரசிக்கிறேன்!
முன்பெல்லாம் கவிதை சொல்ல
ஏதேதோ காரணங்கள் தேவை எனக்கு...
இன்றோ...
நீ மட்டும்!
Thursday, December 07, 2006
Monday, December 04, 2006
Gai special.. for her one week vacation to her village
என் எல்லா நாட்களிலும்
நிறைந்திருக்கிறாய் நீ...
sms ஆகவும் Received callகளாகவும்!
காத்திருப்போர் பட்டியலில் அனுப்பப்பட்ட
அதிகாரியின் மனநிலையில் இருக்கிறேன் நான்!
உன் வருகையைஎதிர்நோக்கி!
இனிஒரு வாரத்திற்கு
என் செல்பேசி ஊமையாகிறது...
தொந்தரவுகளில்லாததால்.. தொந்தரவு!
நட்சத்திரங்களில்லாத வானமாக
நகரப்போகின்றன... எனது நாட்கள்!
அமாவாசை கூட ஒரு நாள்தானடி..
எனக்கு மட்டும் ஏன் ஒரு வாரம்?!
நிறைந்திருக்கிறாய் நீ...
sms ஆகவும் Received callகளாகவும்!
காத்திருப்போர் பட்டியலில் அனுப்பப்பட்ட
அதிகாரியின் மனநிலையில் இருக்கிறேன் நான்!
உன் வருகையைஎதிர்நோக்கி!
இனிஒரு வாரத்திற்கு
என் செல்பேசி ஊமையாகிறது...
தொந்தரவுகளில்லாததால்.. தொந்தரவு!
நட்சத்திரங்களில்லாத வானமாக
நகரப்போகின்றன... எனது நாட்கள்!
அமாவாசை கூட ஒரு நாள்தானடி..
எனக்கு மட்டும் ஏன் ஒரு வாரம்?!
Friday, November 03, 2006
சுற்றிலும் வயல்வெளி...
எட்டி ரசிக்கும் சிகரம்!
வெட்டவெளி ரயில்பாதை...
ஒத்தையடி தார்ச்சாலை..
சின்னஞ்சிறு பறவைக்கூட்டம்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
ஹேய்... ஆடு மேய்க்கும் பையா...
உன்னோடு என்னையும் சேர்த்துக்கொள்வாயா..?
உன் புல்லாங்குழலை
வாசிக்க சொல்லித்தருவாயா...?
நீர் கொண்ட நெருப்பாய்
சுழல்கிறது சூரியன்!
இரவிலும் அனலாய்
தகிக்கிறது நிலவு!
எதைஎதையோ எண்ணி
உழல்கிறேன்...
ஒருவேளை... வேலையிருந்தால்!
அந்த நொடி மட்டும்
அமைதியாகிறது மனது!
ஒவ்வொரு நாளிலும்
வந்து போகின்றன...
நட்சத்திரங்களும் நிலவும்!
தினம்தினம் யாரையோ
தேடிச்செல்கிறான் சூரியன்!
நேற்றிரவும் நினைத்துப் பார்த்தேன் - அது
யாராயிருக்குமென்று....
உனக்குத் தெரிந்தால் சொல்!
தெருக்களின் ஓரத்தில்
மலர்ந்து கிடக்கின்றன பூக்கள்...
சிறுகுழந்தையின் கடைவாயில்
ஒழுகும் எச்சில் போல்...
தண்ணீர் வழியும் தெருக்குழாய்கள்!
நேற்றைய தூக்கத்தின் தொடர்ச்சியாய்
நீண்டு கொண்டிருக்கிறது...
காலைப்பொழுதின் கடமைகள்!
எட்டி ரசிக்கும் சிகரம்!
வெட்டவெளி ரயில்பாதை...
ஒத்தையடி தார்ச்சாலை..
சின்னஞ்சிறு பறவைக்கூட்டம்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
ஹேய்... ஆடு மேய்க்கும் பையா...
உன்னோடு என்னையும் சேர்த்துக்கொள்வாயா..?
உன் புல்லாங்குழலை
வாசிக்க சொல்லித்தருவாயா...?
நீர் கொண்ட நெருப்பாய்
சுழல்கிறது சூரியன்!
இரவிலும் அனலாய்
தகிக்கிறது நிலவு!
எதைஎதையோ எண்ணி
உழல்கிறேன்...
ஒருவேளை... வேலையிருந்தால்!
அந்த நொடி மட்டும்
அமைதியாகிறது மனது!
ஒவ்வொரு நாளிலும்
வந்து போகின்றன...
நட்சத்திரங்களும் நிலவும்!
தினம்தினம் யாரையோ
தேடிச்செல்கிறான் சூரியன்!
நேற்றிரவும் நினைத்துப் பார்த்தேன் - அது
யாராயிருக்குமென்று....
உனக்குத் தெரிந்தால் சொல்!
தெருக்களின் ஓரத்தில்
மலர்ந்து கிடக்கின்றன பூக்கள்...
சிறுகுழந்தையின் கடைவாயில்
ஒழுகும் எச்சில் போல்...
தண்ணீர் வழியும் தெருக்குழாய்கள்!
நேற்றைய தூக்கத்தின் தொடர்ச்சியாய்
நீண்டு கொண்டிருக்கிறது...
காலைப்பொழுதின் கடமைகள்!
Subscribe to:
Posts (Atom)