நதியாய் வந்தேன்...
கடலாய் இருந்தாய்!
பனியாய் வந்தேன்...
துளியாய் இருந்தாய்!
இதழாய் வந்தேன்...
மலராய் இருந்தாய்!
அன்பாய் வந்தேன்...
யோசித்தாய்....
அள்ளிக்கொண்டாய் - என்னை உன்
அன்பில் கொன்றாய்!
என்னைப் பிரிந்துசென்று
தனிமைப்பட வைத்தாய்.. - என்
தனிமையை!
அதிகாலை நேர
வெந்நீர் குளியல் போல
இருக்கிறது...
உன் அருகாமை!
நீ இமைக்கும்
ஒவ்வொரு முறையும்...
இரவு பகல் எனக்கு!
இரவு நேர வானவில் போலத்தான்...
நீ
உறங்கும் போது புன்னகைப்பதும்!
ஒவ்வொரு முறை நீ
இயற்கையை ரசிக்கையில் - நான்
உன்னை ரசிக்கிறேன்!
முன்பெல்லாம் கவிதை சொல்ல
ஏதேதோ காரணங்கள் தேவை எனக்கு...
இன்றோ...
நீ மட்டும்!
Thursday, December 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
your kavithai's are nice.
dei chance ye illada.. indah kavidhaiippo padicha kooda pullarikudhu,,,, super kavidhais... guna rockingg....
keep writing like this kavidhais da..
Post a Comment