நிகழ்காலத்தில்
நித்தமும் இறக்கும் மனிதருக்கு
இறந்தகாலம்தான் வசந்தகாலம் !
வெக்கையைத் தூறிச்சென்ற மழைகூட
திரும்பிப்பார்க்கவில்லை
வெகுநாட்களாய் !
தண்ணீருக்காகத்தான் அடுத்த யுத்தமென்பது
பலித்துவிடுமோ ?!?
வெயில்படர்ந்த
சாலைப்பயணத்தின் ஊடே
நனைத்துச்செல்லும்
மழையின் பதிவுகள்
கிளர்த்திவிடுகின்றன ...
பால்யத்தின் வாசனைகளை !