Saturday, June 01, 2013

பதிவுகள்

நிகழ்காலத்தில் 
நித்தமும் இறக்கும் மனிதருக்கு 
இறந்தகாலம்தான் வசந்தகாலம் !

வெக்கையைத் தூறிச்சென்ற மழைகூட 
திரும்பிப்பார்க்கவில்லை 
வெகுநாட்களாய் !
தண்ணீருக்காகத்தான் அடுத்த யுத்தமென்பது 
பலித்துவிடுமோ ?!?

வெயில்படர்ந்த 
சாலைப்பயணத்தின் ஊடே 
நனைத்துச்செல்லும் 
மழையின் பதிவுகள் 
கிளர்த்திவிடுகின்றன ...
பால்யத்தின் வாசனைகளை !