ஒவ்வொரு மழையும்
சிதைத்து விடுகிறது...
பிளாட்பாரவாசிகளின் வாழ்க்கையை!
முன்னோக்கி சாலையில்
வாகனத்தில் விரைகையில்...
மனசு மட்டும் ஏனோ
பின்னோக்கி பயணிக்கும்!
தெருத்திண்ணையில் அமர்ந்து
மழை பார்த்த நினைவுகள்..
மழைக்கால மேகமாய்
மனசுக்குள் வந்து செல்லும்!
குழந்தை சிரிக்கையில்
தெறிக்கும் எச்சிலாய்.....
சாரல்!
Friday, November 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment