Monday, September 10, 2007

வாழ்க்கை

குடும்பத்துடனான குதூகலத் தருணங்கள்...
குழந்தைகளுடனான நிலாச்சோறு நினைவுகள்...
நண்பர்களுடனான அரட்டைக் கச்சேரிகள்...
காதலியுடன் கடல் பார்த்த காலங்களென...
நெஞ்சு முழுதும் நினைவுகளுடன்
அந்நிய தேசத்தில் அந்நியப்பட்டுப்போய்...
ஆறுதல் முகங்களுக்காய் அலைந்து திரிந்து...
வாழ்வின் முக்கியத் தருணங்களை
இழந்து திரும்பும் நண்பனிடம்
கேட்டுப் பாருங்கள்...
வாழ்க்கை என்றால் என்னவென்பதை!!!

No comments: