Wednesday, June 27, 2007

இரவுச்சிந்தனைகள் பாகம்2

நான் தூங்க
கதைகள் சொல்லும் பாட்டிக்கு...
யார் சொல்வார்
கதைகள்???

புல்வெளியிடையே துளிர்த்திருக்கும்
பனித்துளியைக் கவரவரும்
பகலவன் போல்தானடி நீ வருகிறாய்!!!

இரவில் புலரும் நிலவாய் உன் முகம்...
மின்சாரம் அறுந்த இரவுப் பொழுதுகளில்!!!

நீ வைத்துவிட்டுப் போகும்
இந்த ஒற்றை ரோஜாவுக்காகத்தான்
எனக்கு கல்லறை கட்டச் சொன்னேன்!!!

No comments: