என்
இதய நதிக்கரையெங்கும்
நீ
நடந்து சென்ற கால்தடங்கள்!
நான் உன்னைக் காதலிக்கிறேன்!!
உன் கண்ணின் மைகளுக்குள்ளே...
எனக்கு நடந்து வர ஆசை!
உன் கண்ணின் இமைகளுக்குள்ளே...
உயிர் கடந்து வர ஆசை!!
உன் கால்கள்
நடக்கும் திசையெங்கும் - என்
பிருந்தாவனம்!
உன் கண்கள்
தீண்டும் முதல் பார்வை - என்
நந்தவனம்!
ஒரு மின்னல் போல வந்து..
மின்னல் போல வந்து...
உன்னைப் பார்த்து விட்டு
போகின்றேன்!
ஒரு தென்றல் போல வந்து..
தென்றல் போல வந்து...
உன் கன்னம் தீண்டி விட்டு
செல்கின்றேன்!
No comments:
Post a Comment