அப்போது சிறுவயது...
பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!
அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!
இன்றும் வெட்டிக்கொண்டேன்...
ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!
Monday, April 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment