Wednesday, April 25, 2007

காதல் தேசம்

காதல்....
உளியா... கோடாலியா!!!

காதல்...
கத்தியா... சுத்தியலா!!!

காதல்...
தாயா... நீயா?!?

*** ***

காத்திருக்கும் பொழுதெல்லாம் எப்படி
காதல் மட்டும் தவமாகிறது!?!

*** ***

இந்தக் காதல் மட்டும்
ஏன் அழகானவைகளை
உன்னுடன் மட்டும்
ஒப்பிட வைக்கிறது?!?

*** ***

எப்போதும்
கேள்விக்குறியான என்னை
ஆச்சர்யக்குறியாக்கி
அதிசயம் செய்ததே...
காதலில் அப்படி
என்னதான் இருக்கிறது!!!
காதலைத்தவிர???

No comments: